பொதுக்களம்

கதை திருட்டு

சில பதிவுகளுக்கு காரணம் இல்லாமல் இருக்கும்
அப்படி ஒரு பதிப்பு தான் இது
ஏ. ஆர். முருகதாஸ் பக்கம் சார்ந்தே பேசப்படும்.
பிடிக்காதவர்கள் படிக்காதீங்க
எல்லாமே கிண்டல், கேளினு மாறிட்டு வரோம். ஒரு cinema எடுக்கும் கஷ்டம் இங்க நிறைய பேர்க்கு தெரியிரது இல்லை..
இன்றைக்கு தெரியாத விசயத்த பற்றி பேசி மகிழ்வது இயல்பாகிடுச்சு. நிறைய பொய், வதந்தி, இதுக்கு எத்தனை பேர் பலி ஆராங்கனா யாருக்கும் கவலை இல்லை. Press,media எல்லாம் யாரனாலும் hero ஆக்குராங்க zeroவும் ஆக்குராங்க. கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாம பண்றாங்க.எல்லா வசயத்துலயும் நம்ம பங்கு ஆகிடுரோம் ஆக்கபடுரோம். Me too ங்கறான், She too ங்கறான், he too ங்கறான். எவனும் ஒழுக்க நெறி இல்லாம இருக்கோம்றான்.
தவறு செய்ததவனும் ஒற்றுக்கல தவறு சொல்றவனும் ஒற்றுக்கல. ஆனா எல்லாம் வெளிச்சத்திற்கு வந்தது ன்றான். திருட்டு யார் திருட்டு பண்றத பேசனுமோ அது இங்க யாரும் யாரும் பதிவு பண்ணலை. சினிமா திருட்ட பெரிய விசயம் ஆக்கிடாங்க. அதே நேரத்துல பழைய நெருப்ப அணைச்சுட்டாங்க…
சிந்துர ரத்தம் எல்லாம் திருடிட்டு இருக்கான் அதை பற்றி பேச இங்க தைரியம் இல்லை ஆனா திருப்பி அடிக்காத ஆள்ட வீராப்பு. நெனச்சா வேதனை தான் வருது. எங்க பேசுனாலும் வேற இடத்துக்கு போயிடுச்சு. ஆனா சொல்ல வந்தது இது தான்….
யார்க்கும் சிந்தனைகள் வரலாம்
அது என்னோடது உன்னோடது
அப்படி உரிமை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை
இன்றைக்கு எனக்கு தோன்றியது நாளை இன்னொருத்தற்கு வரலாம் ஏற்கனவே இன்னொருத் தருடையதா இருக்கலாம்.
கலை கடந்து வந்தா தான் அதுக்கு சிறப்பு.
வழி வகுக்குரது நம்மை கடமை
It’s not only speaking about inspiration also aspiration.
அதற்காக முருகதாஸ் courtக்கு போனது சரின்னு சொல்ல மாட்டேன். இருவரும் சேர்ந்து பேசிருக்கனும் , meet பண்ணிருந்தா இவ்லோ பிரச்சினை வந்ததிருக்காது. நல்ல கருத்து சொல்பவர், இப்பொழுதும் அதையே செஞ்சிருக்கார். சர்கார் ரசிப்பவர்களுக்கு சர்கார் தீப ஒளி திருநாள் வாழ்த்து.
மற்றும் அனைவருக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்து.

* எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும்.

Advertisements
என்மொழி

நட்பிருக்கு நண்பன் எதற்கு

நல்ல நினைவில் நீந்தும் நட்பில்
கடலோ வெள்ளமோ
காடோ காட்டு மரமோ
எது வந்தாலும் எதிர்த்தே தீரும்
அதன் போக்கில்….
எல்லை இல்லா நாடு நட்பு
சில்லறையில் சேர்ந்தா என்ன தப்பு
நட்பு வேண்டும் நல்ல தீர்ப்பு எழுதிட
வாழ்க்கை எனும் வழக்கில்.‌…

என்மொழி

காதல் வலியே

ஒரு கன்னத்தில் நீ அறைந்தால்
மறு கன்னத்தில் தீ ஆகுமே
நம் காதலில் பிரிவு இருந்தால்
அது நீ ஆகுமா
இந்த ஊர் தாங்குமா
என் ஆசை காதலி
எனை நீ நினைச்சு பாருடி
உன்னால் தானடி
என் இரவும் பகலாய் மாறுது ஏனடி
என் ஆசை காதலி
எனை நீ நினைச்சு பாருடி
உன்னால் தானடி
என் இரவும் பகலாய் மாறுது ஏனடி
உன்னை பார்த்தே பொழுதும் தொடங்கும்
நீ இல்லை என்றால் எங்கே முடியும்.
திகட்டும் தீயே எங்கே போனாய்
இருக்கும் சிரிப்பை அடக்கிப் போனாய்
விட்டுப் போகும் நிலமை வந்தால்
செத்துப் போவோம் என்றே சொன்னாய்
விட்டுப் போகும் நிலமை வந்ததால்
செர்ரு போய் விட்டாயோ அம்மா
இது முடிவாகுமா
இந்த ஊர் தாங்குமா
என் ஆசை காதலி
எனை நீ நினைச்சு பாருடி
உன்னால் தானடி
என் இரவும் பகலாய் மாறுது ஏனடி
காதலில் கட்டிய எஃகு கோட்டை
கனவாப் போச்சுனா நம்ப மாட்டே
எங்க போட்ட
ஏன் காதலை ஏன்மா தூக்கிப்போட்ட…
என் ஆசை காதலி
எனை நீ நினைச்சு பாருடி
உன்னால் தானடி
என் இதயம் வலித்து நோகுது ஏனடி